Asianet News TamilAsianet News Tamil

கறார் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி... இது என்ன காட்டாட்சியா..? கொந்தளிக்கும் மக்கள்..!

காட்டாட்சி நடக்கிறது. கணக்கே எடுக்காமல் எப்படி மின் கட்டணம் கட்டுவது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

Minister Senthil Balaji showing karar ... What is this show ..? Turbulent people ..!
Author
Tamil Nadu, First Published Jun 15, 2021, 11:47 AM IST

கணக்கே எடுக்காமல் எப்படி மின் கட்டணம் கட்டுவது செந்தில்பாலாஜி விளக்க வேண்டும் என பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மின் கணக்கீடு செய்ய முடியாததால், மின் நுகர்வோர்கள் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதி(இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.Minister Senthil Balaji showing karar ... What is this show ..? Turbulent people ..!

மின் கணக்கீடு பணிகள் நடைபெறாததால் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் செலுத்தப்பட்ட மின் கட்டணத்தை மின் நுகர்வோர்கள் செலுத்தலாம் என்றும் வரும் ஜூலை மாதம் முறையாக மின் கணக்கீடு செய்யப்படும் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த கட்டணம் அதிகப்படியாக வசூலிக்கப்படுவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது.
 
இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடிவு செய்த மின் வாரியம், ஊரடங்கு காலத்தில் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின் பயன்பாட்டை எழுதியோ அல்லது புகைப்படம் எடுத்தோ அலுவலகத்தில் தெரிவித்தால் அதற்கு ஏற்ற கட்டணம் கணக்கீடு தெரிவிக்கப்படும் என்றும் அந்த தொகையை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அறியாத மக்கள் பலர், மின் கட்டணத்தை செலுத்தாமல் இருக்கின்றனர்.

Minister Senthil Balaji showing karar ... What is this show ..? Turbulent people ..!

இந்த நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்த ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.Minister Senthil Balaji showing karar ... What is this show ..? Turbulent people ..!

இந்நிலையில், ‘’2019கட்டணத்தையே இப்ப கட்ட சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் தானா? சென்ற முறை கடை திறந்திருந்த பொழுது செலுத்திய கட்டணத்தை மூடியிருந்த இந்த மாதத்திற்கும் கட்ட சொல்வது கொடுமை. இதில் அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கறாராக அறிவிக்கிறார். காட்டாட்சி நடக்கிறது. கணக்கே எடுக்காமல் எப்படி மின் கட்டணம் கட்டுவது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios