Asianet News TamilAsianet News Tamil

AIADMK: அடாவடித்தனம் செய்யும் அமைச்சர் செந்தில்பாலாஜி.. இதெல்லாம் ஒரு பொழப்பா என விளாசும் எடப்பாடியார்..!

அம்மா  மினி கிளினிக்கை மூட திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. டிசம்பர் 4ம் தேதி முதல் அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் 1800 பேரும், உதவியாளர்கள் 1420 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.  

Minister Senthil Balaji is making a fuss... edappadi palanisamy Accusation
Author
Salem, First Published Nov 29, 2021, 12:54 PM IST

அம்மா  மினி கிளினிக்குகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- அம்மா  மினி கிளினிக்கை மூட திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. டிசம்பர் 4ம் தேதி முதல் அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் 1800 பேரும், உதவியாளர்கள் 1420 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.  ஏழை, எளிய மக்களுக்காக அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

Minister Senthil Balaji is making a fuss... edappadi palanisamy Accusation

அதேபோல், அம்மா உணவகங்களை மூட திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. அம்மா உணவகங்களை மூட திமுக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அம்மா உணவகங்களில் பொருட்களை குறைத்தனர். தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் சம்பளத்தை குறைக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவருந்தி வருகின்றனர். மேலும், அதிமுகவினரை மிரட்டி திமுகவிற்கு ஆள் சேர்க்க பார்க்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அடாவடித்தனமாக செயல்பட்டு வருகிறார். 

Minister Senthil Balaji is making a fuss... edappadi palanisamy Accusation

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் தான் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Minister Senthil Balaji is making a fuss... edappadi palanisamy Accusation

போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்யும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட கவுன்சிலர் மீது பொய் வழக்கு பதிந்து அச்சுறுத்துகிறது திமுக. வாக்குறுதி நிறைவேற்றததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுகவுக்கு அச்சம். சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். கனமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கையையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios