முதல்வர் ஸ்டாலினே அசர போகும் அளவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்ய போகும் தரமான சம்பவம்.. அலறும் அதிமுக.!
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்த 50,000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்த 50,000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கோவை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 23ம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார். கொங்கு மண்டலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க;- ஆணவம்! அகங்காரத்தின் வெளிப்பாடு! இதுலவேற டாக்டர் பட்டம்.. பிடிஆரை பின்னி பெடல் எடுத்த நாராயணன் திருப்பதி.!
அப்போது, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மாற்று கட்சியினர் இணையும் விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வுக்காக பிரமாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வரும் 24ஆம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டக்கூடிய சிறப்பு வாய்ந்த அரசு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு மாலையில் பொள்ளாச்சியில் 5 மணியளவில் மாற்று கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொள்கின்ற சிறப்பு வாய்ந்த கூட்டம் நடைபெற உள்ளன. 50,000க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் தளபதி ஸ்டாலின் தலைமையை ஏற்று அவரது முன்னிலையில் கழகத்தில் இணைத்து கொள்வதற்கான சிறப்பான பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- இலவசம் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்.. டார் டாரா கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல், இபிஎஸ் ஆதரவாளர்களான கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களால் ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் என பலர் திமுகவில் இணை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.