சவுக்கு சங்கருக்கு எதிராக களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி.! 4 வழக்குகளை பதிவு செய்து அதிரடி
தனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வரும் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
திமுகவை விமர்சிக்கும் சவுக்கு சங்கர்
பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி ஆகியோரை கடுமையாக விமர்சித்து தனது கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இதே போல மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்த வழக்கில் சுமார் 4 மாதங்கள் வரை சிறையில் இருந்தார். அப்போது சவுக்கு சங்கர் மீது நிலுவையில் இருந்த வழக்குகளில் அவரை கைது செய்து திமுக அரசு மீண்டும் சிறையில் அடைத்தது. தொடர்ந்து சவுக்கு சங்கர் வாங்கி வந்த அரசு ஊழியர்களுக்கான பென்சனை நிறுத்தியும் உத்தரவிட்டது. இதனையடுத்த சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் திமுக மீதான தனது விமர்சனங்களை தீவிரப்படுத்தினார். ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை, தமிழக அமைச்சரவை மாற்றம் போன்றவற்றில் திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
சவுக்கு சங்கர் மீது வழக்கு
மேலும் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் அடுத்த முதலமைச்சர், திமுகவை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். மஹாராஷ்டிரவால் ஷிண்டே போல் தமிழகத்தில் செந்தில் பாலாஜி என கூறியிருந்தார். மேலும் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாகவும், பணி நியமன ஆணைக்கு பல லட்சம் வசூலிப்பதாகவும் கூறியிருந்தார். கரூரில் பல கோடி மதிப்பிலான வீடு கட்டுவதாகவும் சவுக்கு சங்கர் பல்வேறு சமூக வலை தளத்தில் பேட்டி கொடுத்தார், டுவிட்டர் மூலமாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக 4 பிரிவின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்கள்
கர்நாடக தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையை விமர்சிப்பதா..? பாஜக தலைவருக்கு ஆதரவாக களம் இறங்கிய நமீதா