Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..! மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி..!

தற்போது நடைபெற்று வரும் சட்ட பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் பல முக்கிய அறிவிப்புகள்  வெளியிடப்பட்டு உள்ளன. 

minister senkottaiyan announced 24 great plan in education system
Author
Chennai, First Published Jul 2, 2019, 4:59 PM IST

தற்போது நடைபெற்று வரும் சட்ட பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன் படி, பள்ளி கல்வித்துறையில் 24 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.

minister senkottaiyan announced 24 great plan in education system

முக்கிய அறிவிப்புகள்:

அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும்

88 கல்வி மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் விரைவில் திறக்க திட்டம் விரிவுபடுத்தப்படும்

எழுத படிக்க தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை கல்வியை பயிற்றுவிக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது 

minister senkottaiyan announced 24 great plan in education system

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12.39 கோடியில் ஒருங்கிணைந்த  நலவாழ்வு திட்டம் கொண்டுவரவும், 

 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை 6 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக  உயர்த்த  திட்டம் 

எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களின் வருகையை தெரிவிக்க ரூ.1 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது

2019 - 2021 இல் சிறப்பு பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வித்திட்டம் 6.23 கோடியில் செயல்படுத்தப்படும்   

கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் ஒரு கோடியில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும் 

அண்ணாமலை பல்கலைகழகத்தில் 2.34 கோடி செலவில் அடைகாப்பு மையம் உருவாக்கப்படும்

50 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி மூலம் பாடம் நடத்த திட்டம்

minister senkottaiyan announced 24 great plan in education system

91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி மற்றும் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும்

வெளிநாட்டு பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு 100 மாணவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு 

பட்டதாரி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த கலந்தாய்வுக் கூட்டங்கள்

கோவை,சேலம், திருச்சி, மதுரை, நெல்லையில் தலா ரூபாய் 20 லட்சம் செலவில் கலந்தாய்வு கூடம் உருவாக்க திட்டம் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை அனைத்தும் நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில் மாணவ செல்வங்கள் நல்ல பயன் பெறுவார்கள். தற்போது வெளியாகி  உள்ள அறிவிப்பு மாணவ செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios