Asianet News TamilAsianet News Tamil

தற்காலிக ஆசிரியர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.... செங்கோட்டையன் அதிரடி!

ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். 

Minister Sengottaiyan says Temporary teachers will permanent post
Author
Tamil Nadu, First Published Dec 22, 2018, 10:19 AM IST

ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். 

கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை புகுத்தி வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அவரது ஆக்கப்பூர்வமான பணிகள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மற்றொரு அறிவிப்பை கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்ற போது அவர் அறிவித்துள்ளார். 

Minister Sengottaiyan says Temporary teachers will permanent post

’’இந்தியாவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமுடையவர்களாக சிறந்து விளங்குகிறார்கள். மாணவர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு மாணவ-மாணவிகளை பெற்றோரே விரும்பித்தான் அனுப்புகிறார்கள். இதுபற்றி பள்ளிகளுக்கு அறிவுரை எடுத்து கூறப்படும்.Minister Sengottaiyan says Temporary teachers will permanent post

தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளம் பெற்று பணிபுரிகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது’’ என அவர் தெரிவித்தார். இந்தத் தகவலால் தற்காலிக ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios