தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் நடிகர் ரஜினி காந்தை ரகசியமாக சந்தித்து அரசியல் பேசியதாக  சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் அதிரடியாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளராகவும், சென்னை முன்னாள் மேயராகவும்  இருந்தவர் கராத்தே தியாகராஜன்.  சமீபத்தில்  கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்தவராக இருந்தபோதும்  நடிகர் ரஜினிகாந்திற்கு மிக நெருக்கமாகவும் அவரின் தீவிர அதரவாளருமாக இருந்துவந்தார். அத்துடன்  அடிக்கடி, திமுக உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சிப்பது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசுவது  போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் என்பதே கராத்தே  மீதான குற்றச்சாட்டு. 

இதுதான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாற்காக காரணம். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில்  தற்போது முழுநேரமாக ரஜினிகாந்தின்  அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளரைப்போல் செயல்பட்டு வருகிறார் காராத்தே தியாகராஜன். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் திட்டமிட்டபடி  ரஜினி காந்த் விரைவில் தன்னுடைய கட்சியை அறிவிப்பார் என்றார். தற்போது அவர் கமிட் செய்துள் இரண்டு படங்களை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் முழுநேர அரசியிலில் ரஜனி தீவிரம் காட்ட உள்ளார் என்றார். அவர் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் இறங்கிவிட்டால் கோட்டையில் ரஜினி கொடிதான் பறக்கும்.

 

அவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை.  என்ற அவர்,  ரஜனிக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும்  பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர் செங்கோட்டையின் கூட நடிகர்  ரஜினி காந்தை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார் என்று கராத்தே தியாகராஜன் கூறினார். அவரின் இந்த கருத்து அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர் பலர் ரஜினியை விமர்சித்து பேசிவரும், அதிமுகவின் முக்கிய அமைச்சராகவும் முதல்வருக்கு நெருக்கமானவராகவும் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் ரஜினியை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.