சினிமாவில் வேண்டுமானால்  கமல் முதலமைச்சராகலாம் , நிஜத்தில்  ஆகமுடியாது  என்று அமைச்சர் செல்லூர் ராஜி விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

தமிழக அமைச்சர் சொல்லூர் ராஜூ, மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் ,தமிழக அரசை கமல் தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அமைச்சர், கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியுமே தவிர நிஜத்தில் ஆகமுடியாது, அது அவருக்கே தெரியும் . நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள் மக்கள் அவரைத் தலைவராகப் பார்க்கவில்லை என்பதையே காட்டுகிறது. 

மக்கள் தான் எஜமானர்கள். ஜனநாயகத்தின் இறுதிக் காவலர்கள். அவர்கள் அம்மாவின் ஆட்சியையும், அதிமுக கட்சியையும், ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.எம்ஜிஆரின் தொப்பியும் கண்ணாடியும் ஊர்வலமாகச் சென்றாலே ஓட்டு விழும். தெய்வம் தேரில் வந்தாலே மக்கள் கூடுவார்கள், ஆனால் அம்மா காரில் வந்த போது மக்கள் வெள்ளம் சூழும். மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் கமல்ஹாசன் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் சொல்லுகின்றன. அவரை நடிகராகவே மக்கள் பார்க்கிறார்கள்