Asianet News TamilAsianet News Tamil

அன்னைக்கு தவக்களை... இன்னைக்கு உதயநிதி... விஷயம் ஒன்னு தான் திமுகவை மரண பங்கப்படுத்திய செல்லூர் ராஜூ...!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகளால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வயிறு எரிச்சல்படுகிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

minister sellur raju slams udhayanidhi stalin
Author
Madurai, First Published Nov 30, 2020, 6:25 PM IST

முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகளால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வயிறு எரிச்சல்படுகிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ;- மதுரைக்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி வைக்கிறார். முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 எம்.எல்.டி., குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது. 17 லட்சம் மக்கள் பயன்படுவர்கள்.  நடிகர் ரஜினி நல்ல முடிவு எடுப்பார்.  அவர் கட்சி ஆரம்பித்தால் அவரது கொள்கை அறிந்த பிறகு தான் கருத்து கூற முடியும்.

minister sellur raju slams udhayanidhi stalin

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத  உள் ஒதுக்கீட்டில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டுகின்றனர். அதனால் தான் மு.க.ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார். 2021லும் பழனிசாமி தான் முதல்வராக மக்கள் விரும்புகின்றனர். அதிமுக அரசில் மக்கள் பாதிப்பு இல்லாமல் உள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி தான். கனிமொழியை, உதயநிதியை  பார்க்க கூட்டம் அதிகம் கூடுகிறது என கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதியே கூறி உள்ளார். கூட்டம் கூடியதை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது. கூட்டம் அனைத்தும் ஓட்டாக மாறாது. 

minister sellur raju slams udhayanidhi stalin

மேலும், முந்தானை முடிச்சு' படம் வெளியான நேரத்தில் நடிகர் தவக்களை நடிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல ஊர்களுக்கு அவரை அழைத்து சென்று படத்தை பிரபலப்படுத்தினர். அவர் மதுரை வந்தபோதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஓட்டு போட்டிருப்பார்களா, மாட்டார்கள். அன்று தவக்களையை வேடிக்கை பார்க்க வந்தது போல் இன்று உதயநிதியை பார்க்க மக்கள் வருகின்றனர்.என விமர்சனம் செய்தார்.சசிகலா விடுதலையான பின் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios