தமிழனின் மரியாதையை கெடுத்தவர் வேட்டி கட்டிய ஆ.ராசா. ஆனால், வேட்டி கட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழனின் பெருமையை நிரூபித்தவர் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ;- டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தபோது சாலை பணிகளுக்காக பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. ஆறுவழிச்சாலை திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜெயலலிதா எதிர்க்கவில்லை. எதிர்கால திட்டம் என்பதால் ஜெயலலிதா அப்போது போராட்டம் நடத்தவில்லை.

ஆனால். தற்போது அதுபோன்ற பொது நோக்கம் ஸ்டாலினுக்கு இல்லை. ஜீ பூம்பா, சூ மந்திரகாளி எனக்கூறுவது போல உடனடியாக முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், அது ஒரு போதும் நடக்காது. சைக்கிளில் போன ஆ.ராசா தற்போது வெளிநாட்டுக் காரில் செல்கிறார். உலகெங்கும் தமிழன் பெயரைக் கெடுத்தவர் ராசா. எங்களைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு தகுதி இல்லை. தமிழனின் மரியாதையை கெடுத்தவர் வேட்டி கட்டிய ஆ.ராசா.

ஆனால், வேட்டி கட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழனின் பெருமையை நிரூபித்தவர். திகார் வா வா என்பதால் ஆ.ராசா அதிமுகவைப் பற்றி ஏதாவது சொல்லி விமர்ச்சிக்கிறார் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.