minister sellur raju criticize dmk

தமிழக அரசு, மத்திய அரசிற்கு அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாநில அரசின் நிதியைப் பெறுவதற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் திமுகவை விமர்சித்து பதிலளித்தார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆமாம் சாமி போடும் அடிமையாகத்தான் திமுக இருந்தது என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.