அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் வீட்டில் திடீர் தற்கொலை.. இது தான் காரணமா?
இந்து அறிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து அறிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு. அவருடைய உடன் பிறந்த அண்ணன் தேவராஜ். ஓட்டேரியில் உள்ள அமைச்சர் சேகர்பாபு வீடு பின்புறத்தில் அவருடைய அண்ணன் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க;- அடுத்து என்ன நிகழுமோ? அச்சத்தில் தமிழக மக்கள்.. கவலையில் ராமதாஸ்..!
இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் அலறிக்கொண்டு அழுது கதறினர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த சில நாட்களாக தேவராஜ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தற்கொலை செய்தியை அறிந்த தொண்டர்கள் அவரது வீடு முன்பு குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- இதுக்கு அவங்கதான் காரணமா? பெட்ரோல் குண்டு வெடிப்பு பற்றி ரகசியம் சொல்லும் சீமான்.!