Asianet News TamilAsianet News Tamil

எல்லா கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய முடியாது.. அமைச்சர் சேகர்பாபு கொடுத்த ஷாக் !

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Minister sekar babu press meet about It is not possible to worship in Tamil in all temples at chennai
Author
Chennai, First Published May 16, 2022, 2:35 PM IST

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ‘கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யும் விதத்தில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மனசாட்சி உள்ளவர்கள் மாற்று கருத்தை பதிவிட முடியாத வகையில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற அறிவிப்பு இல்லாமல் 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி உள்ளது. 

Minister sekar babu press meet about It is not possible to worship in Tamil in all temples at chennai

கோடை காலம் என்பதால் சாமி தரிசனம் செய்ய வெயிலில் வரிசையில் நிற்கும் பயணிகளுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் கபாலீஸ்வரர் கோவிலில் மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான்கள் அமைக்கபட்டுள்ளது. இது விரிவுபடுத்தப்பட்டு விரைவில் தமிழ்நாடு முழுவதும் அதிக பக்தர்கள் கூட்டம் வரும் கோவில்களில் அமைக்கப்படும்.பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில் தென்னை நார்கள் அமைப்பது எலுமிச்சை ரசம் மோர் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு வழங்குவது போன்றவற்றை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்துகிறது.   

முடிந்தவரை அனைத்து கோவில்களிலும் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை தொடங்க உள்ளோம். இது கட்டாயமானது இல்லை. தற்போது வரை 48 கோவில்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.  அன்னை தமிழில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சனை செய்வது கடினம். எந்தெந்த கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வாய்ப்புள்ளதால் அந்த கோவில்களில் எல்லாம் தமிழில் அர்ச்சனை செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிக்க தான் இருக்கிறது.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் சர்ச்சை பேச்சு !

இதையும் படிங்க : சாவு பயம் காட்டும் பப்ஸ்.. சவர்மாவுக்கு அடுத்து பப்ஸ்.? தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் !

Follow Us:
Download App:
  • android
  • ios