நீங்கள்தான் கடவுள் எனக்கூறி துப்புரவு பணியாளரின் காலில் விழுந்து வணங்கிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் செயல் அனைவரையும் வியப்படையச்செய்துள்ளது. 

மதுரை திருமங்கலம், ஆலம்பட்டியில் 'தூய்மை பணியாளர்களை சந்தித்து உதயகுமார் நன்றி தெரிவித்து அவர்களை கவுரவித்தார். அப்போது,  தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அவர், ’நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள்’எனக் கூறி விழுந்து வணங்கினார். தற்போது பணியாற்றும் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அப்போது துப்புரவு பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதிலளித்த உதயகுமார் ’நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார். 

பின்னர் பேசிய அவர், ‘’ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை மக்கள் கூடும் எந்த விதமான மத திருவிழாக்களும் நடைபெறுவதற்கு அனுமதி இல்லை. ஊரடங்கு உத்தரவும் முடிந்த பின்பு வரக்கூடிய திருவிழாக்கள் நடைபெறும்’’ எனத் தெரிவித்தார்.