மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தற்பேதைய மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக உள்ளார். இன்று காலை இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், உடனடியாக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு ராம்விலாஸ் பஸ்வான் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.