மோடி தான் எங்களின் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி தான் இந்தியாவின் தந்தை என கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்  சிவகாசியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம். மக்களுக்காக உழைக்க கூடிய கூட்டம் அதிமுக கூட்டம் தான் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி கவலைக்கிடமான வெற்றி என்றும் எந்த நேரத்திலும் அவர்களுக்கு ஆபத்து உண்டு என்றும் கூறினார்.

தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க விடமாட்டோம். அப்படி எதிர்ப்பை மீறி திணித்தால் எடப்பாடி பழனிச்சாமி அதை தடுத்து நிறுத்துவார்.  திமுகவினர் நாடாளுமன்றம் சென்றால் மோடிக்கும் அமித்ஷாவும் சலாம் போடுகிறார்கள்.

ஆனால், இங்கு வந்தால் கோபேக் என்கிறார்கள். நரேந்திர மோடி வீட்டிற்கு நாங்கள் தான் செல்வோம் எங்களுக்குத்தான் உரிமை உள்ளது. பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை ஸ்தானத்தில் வைத்து மகிழ்கிறோம் என்றார். ஏற்கனவே மோடிதான் எங்கள் டாடி என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.