அதிமுகவில் பில்டிங் வீக்காக இருந்தாலும், பேஸ்மட்டம் ஸ்ட்ராங்காக உள்ளது என்றும், ஆனால் திமுகவில் பில்டிங் ஸ்ட்ராங்காக உள்ளது ஆனால், பேஸ்மட்டம் வீக்காக உள்ளதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகர், தேசபந்து மைதானத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுப் பேசினார். அதிமுகவில் பேஸ்மட்டம் ஸ்டாராங்காக உள்ளது. பில்டிங்களில் சிறிய விரிசல்கள் இருக்கிறது. அதனை சரி செய்து கொள்ளலாம். பேஸ்மட்டம் ஸ்ட்ராங்காக இருக்கிறது.

 

பில்டிங்கில் சிறு விரிசல்கள் இருந்தால்கூட அதனை சரி செய்து கொள்ளலாம். அதற்கான வல்லுநர்கள் எல்லாம் நம்மிடம் உள்ளனர். அவர்களை வரவழைத்து அதனை சரி செய்து, திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம். ஆனால் திமுகவில் ஸ்திரத்தன்மை கிடையாது. பேஸ்மட்டமே வீக்காக உள்ளது. எப்படி பில்டிங் நிற்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.