ஏழை எளிய மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே ஆட்சியாக எடப்பாடியாரின் ஆட்சி இருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ஏழை எளிய மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே ஆட்சியாக எடப்பாடியாரின் ஆட்சி இருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில்;- நிவர் புயல் தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களைப் பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
ஆவின் பால் புயல் பாதித்த பகுதிக்கு தங்கு தடையின்றி கிடைத்துள்ளது. புயலைப் பொறுத்தமட்டில் வரும் முன் காப்போம் என்ற முறையில் எடப்பாடியார் எடுத்திருக்கும் நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
முதல்வர் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்வதை பார்த்து வேறு வழியின்றி ஸ்டாலின் புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார். அவர் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியைப் பார்வையிடவில்லை, தேர்தலைக் கருத்தில் கொண்டு பார்வையிடுகிறார் என விமர்சனம் செய்துள்ளார். யார் நடிக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது சட்டமன்ற தேர்தலின் போது எதிரொலிக்கும் எனவும் கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2020, 3:24 PM IST