Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தலைக்கு மேல் கத்தி.!! வேகமெடுக்கிறது சொத்து குவிப்பு வழக்கு, கலக்கத்தில் அதிமுக.

அவர் தன் மனுவில், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்ந்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

Minister Rajendra Balaji shouted over the head. !! Accelerates property accumulation case, agitated in turmoil.
Author
Chennai, First Published Nov 6, 2020, 4:14 PM IST

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கின் விசாரணையை டிசம்பர் 17 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்  மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

Minister Rajendra Balaji shouted over the head. !! Accelerates property accumulation case, agitated in turmoil.

அவர் தன் மனுவில், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்ந்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி சத்தியநாரயணன் தலைமையிலான அமர்வு, கடந்த 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி'க்கு உத்தரவிட்டிருந்தனர். 

 Minister Rajendra Balaji shouted over the head. !! Accelerates property accumulation case, agitated in turmoil.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று  விசாரணையை டிசம்பர் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios