Asianet News TamilAsianet News Tamil

உங்க மனசு யாருக்கு வரும்.. பெற்றோரை இழந்து நிர்கதியாய் நின்ற சிறுமிக்கு அமைச்சர் KTR காட்டிய கரிசனம்...!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். 

Minister Rajendra Balaji has given Rs. 5 lakh to an 11-year-old girl who lost her parents in an explosion
Author
Virudhunagar, First Published Feb 22, 2021, 1:09 PM IST

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன குளத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் கடந்த வாரம்பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி மற்றும் குத்தகைதாரர்கள் சக்திவேல், சிவக்குமார், பொண்ணு பாண்டி ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister Rajendra Balaji has given Rs. 5 lakh to an 11-year-old girl who lost her parents in an explosion

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், குரங்குடி பகுதியைச் சேர்ந்த பாக்கிய ராஜ் - செல்வி தம்பதியினர் உயிரிழந்தனர். இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது இவர்களது குழந்தை நந்தினி  7ம் வகுப்பு படிக்கிறார். தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை இன்று பெற்றோர்களை இழந்து அவர்களின் உடல்களைப் பெற உறவினர்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனை பிணவறையில் முன்பு காத்திருந்தது காண்போரைக் கண்கலங்கச் செய்தது. 

Minister Rajendra Balaji has given Rs. 5 lakh to an 11-year-old girl who lost her parents in an explosion

இந்நிலையில் தாய் தந்தையை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் சிறுமியின் எதிர்கால நலன் கருதி அரசு உதவ முன்வர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமிக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கினார். மேலும், சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே எம்.பி.மாணிக்கதாகூர் சிறுமியின் கல்வி செலவை காங்கிரஸ் ஏற்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios