இலங்கைல குண்டு வெடிச்சா இங்க பதறும்... இங்க வெடிச்சா அங்க பதறும் ..!  

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிராவாதி ஓர் இந்து என கமல் தெரிவித்ததற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரமாரி பதிலடி கொடுத்து வருகிறார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, கமல்ஹாசனின் பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்து விட்டால் நானும் எனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வேன்.

இலங்கையில் குண்டு வெடித்தால், இந்த இருக்கும் தமிழர்கள் பதறுவார்கள். இங்கே குண்டு வெடித்தால் இலங்கை தமிழர்கள் கொதிப்பார்கள். அப்படிப்பட்டதொப்புள் கொடி பாசம் உள்ளது. இப்படி ஒரு தருணத்தில், கமல் இப்படி பேசுவது எவ்வளவு பெரிய வாய் கொழுப்பு. கமல்ஹாசன் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பணம் வாங்கி விட்டாரா? பிரிவினைவாதத்தை கமல்ஹாசன் தூண்டுகிறார்.எனவே உளவுத்துறை அவரை கண்காணித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கமல்ஹாசனை கண்டித்தால் தவறால் குற்றமா..? கமல்ஹாசன் பேசுவது நியாயமற்றது. இந்தியா மதசார்பற்ற நாடு என பேசினார். தொடர்ந்து பேசிய அவர், கே எஸ் அழகிரி இந்தியாவில் இருப்பதற்குத் தகுதியரற்றவர். இத்தாலிக்கு தான் செல்ல வேண்டும். கி.வீரமணியின் திமிர் பேச்சு அடக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அடக்குவார்கள். அவர் ஒரு விளங்காதவர்.

எனது பேச்சை ஆலோசனையாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அராஜகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என காரசாரமாக பேசி தனது உரையை முடித்துக்கொண்டார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.