மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடும் அதிருப்தியில் உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. வார்த்தைக்கு வார்த்தை முதல்வரை புகழும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை மானியக் கோரிக்கை அறிமுகம் செய்து பேசிய போது முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாருடைய பெயரை உச்சரிக்க நேரடியாக பேசியதே அவர் அதிருப்தில் இருப்பதற்கு இது ஒன்றே போதுமானது. 

பால்வளத்துறை அமைச்சராகவும், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. இவர் அனைத்து பிரச்னைகளிலும் தனது கருத்துக்களை தெரிவிப்பார். இது சர்ச்சைக்குரியதாகி விடும். அதிமுகவில் இருந்து கொண்டே நடிகர் ரஜினிக்கும் கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட சசிகலாவுக்கும் தொடர்ந்து ஆதரவாக பேசி வந்தார். கடந்த சில நாட்களாக சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் கட்சி தலைமைக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கினார். 

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே கட்சியில் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் ஒருவரை அமைச்சரின் ஆதரவாளர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரபரப்புக்கிடையே கடந்த 22-ம் தேதி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின், விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் புதிய மாவட்டச் செயலாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.

பதவி பறிப்பு அறிவிப்பு வெளியானவுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை வரவேற்ற அதிகாரிகள் விஐபிக்கள் தங்கும் அறையில் அமர வைத்தனர். ஆனால், அவரை சந்திக்க முதல்வர் மறுத்து விட்டார். இதனால் கடுமையான அதிருப்தியில் வீடு திரும்பினார்.  கடந்த 24ம் தேதி அவரது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. வழக்கமாக, அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசும்போது முதலில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை புகழ்ந்து பேசிவிட்டுத்தான் பதிலுரை அல்லது அறிவிப்புக்குள் செல்வார்கள். 

ஆனால், பால்வளத்துறை மானியக் கோரிக்கை அறிமுகம் செய்து பேசிய போது முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாருடைய பெயரை உச்சரிக்க நேரடியாக பேசினார்.  அதேநேரத்தில், சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன் முதல்வர் மற்றும் துணை முதல்வரை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சந்தித்தார். அப்போது போட்டோ எடுக்கும்போது மருந்துக்கு கூட சிரிக்கவில்லை. வணக்கம் செய்துவிட்டு, பேசாமல் திரும்பி வந்துவிட்டார்.  இந்நிலையில். கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.