'HAPPY BIRTHDAY ANGRY BIRD' அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு வாழ்த்து சொல்லிய அன்பில் மகேஷ்
மதுரை விமான நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடினார் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அருகில் அமைச்சர் உதயநிதி, அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் பிடிஆர், மதுரை மாவட்டம் சொக்கிகுளத்தில் 1966ஆம் ஆண்டு மார்ச் 7ல் அதாவது இன்றைய தினத்தில் பிறந்தார். தந்தை பழனிவேல் ராஜன். தாய் ருக்மணி. இவரது தந்தையும் ஒரு அரசியல்வாதிதான். திமுக கட்சியில்தான் இருந்தார்.
அப்பா, தாத்தா என அரசியல் குடும்பத்தின் வாரிசான பிடிஆர், மதுரையின் திமுக முகமாக இருக்கிறார் என்பது மறுப்பதிற்கில்லை. வெளிநாட்டில் படித்து அரசியலுக்கு வந்தாலும், முதலில் டீசண்ட் அரசியல் செய்தாலும், தற்போது வேற லெவலில் களத்தில் இறங்கி அடித்து வருகிறார்.
இதையும் படிங்க..பெண்களுக்கு மாதம் "ஆயிரம் ரூபாய்" திட்டத்தை தொடங்கி வைத்தார் ம.பி முதல்வர் - தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா.?
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடினார் அமைச்சர் பிடிஆர். அருகில் அமைச்சர்கள், உதயநிதி, அன்பில் மகேஷ், மூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் 'HAPPY BIRTHDAY ANGRY BIRD' என்று வாழ்த்தினார். திமுகவை சேர்ந்தவர்கள் அமைச்சர் பிடிஆருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க..சிடிஆர் நிர்மல் குமாருக்கு புது "ஆப்பு".. நேற்று ராஜினாமா.! இன்னைக்கு இப்படியா.? அண்ணாமலையின் பக்கா ஸ்கெட்ச்!