ஜெயலலிதாவின் ஆட்சியை முதல்வர் பழனிசாமி சிறப்பாக நடத்தி, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். 

புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கடலூரில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது, வெள்ளச் சேதத்தை சமாளிப்பதில் அ.தி.மு.க தவறிவிட்டது. சென்னையில் முன்பு ஏற்பட்ட வெள்ளச் சேதத்திலும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்;- முதல்வர் கூறியதைப் போல் ரஜினி முதலில் அரசியல் கட்சியைப் பதிவு செய்யட்டும், அவரது கொள்கைகளைச் சொல்லட்டும். பின்னர், அதைப் பற்றி பேசுவோம் என்றார். 

ஜெயலலிதாவின் ஆட்சியை முதல்வர் பழனிசாமி சிறப்பாக நடத்தி, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார். எனவே, 2021-ல் நடைபெறும் தேர்தலிலும் வென்று ஆட்சியை தொடர்வோம். அதேபோல், ஸ்டாலினின் கருத்து பற்றிய கேள்விக்கு, ஸ்டாலின் அரசியல் பாடம் படிக்காதவர். அதனால், அப்படிப் பேசுகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.