Asianet News TamilAsianet News Tamil

”நினைவிடமாக்கும் பணியை யாரும் தடுக்க முடியாது” - ஒ.எஸ் மணியன் சவால்...!!!

Minister OS Maniyan said that nobody can stop the task of commemorating the residence of Jayalalitha and the compensation will be given to the owners.
Minister OS Maniyan said that nobody can stop the task of commemorating the residence of Jayalalitha and the compensation will be given to the owners.
Author
First Published Aug 19, 2017, 4:28 PM IST


ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணியை யாரும் தடுக்க முடியாது எனவும் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக அவரது மறைவிற்கு பிறகு இரு அணிகளாக பிரிந்தது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவே அவரது அணியில் இருந்த எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது. 

இதையடுத்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி க்கும் எடப்பாடிக்கும் சலசலப்பு ஏற்பட்டது. 

இதனால் எடப்பாடி ஒபிஎஸ் பக்கம் சாய ஆரம்பித்தார். ஆனால் ஒபிஎஸ் தரப்பு இரு கோரிக்கைகளை முன்வைத்தது. அதன்படி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், ஜெவின் வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும், தெரிவித்தார். 

இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் அவரது சகோதரர் தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஒ.எஸ் மணியன், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணியை யாரும் தடுக்க முடியாது எனவும் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இணைப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் எனவும், சசிகலா பொதுச்செயலாளரா என்பது குறித்த கேள்விக்கு தேர்வாணையத்தின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios