தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது நுரையீரல் பெரும் பகுதி  பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 'எக்மோ' கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    1948 ஆம் ஆண்டு மார்ச் 28 இல் ராஜகிரியில் பிறந்த துரைக்கண்ணு, இதுவரை 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2016ல் ஜெயலலிதா இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்

 முதலமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவாகவே இருந்தது. மேலும் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் நேரில் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11. 15 மணிக்கு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது