Asianet News TamilAsianet News Tamil

தோல்வி பயத்தில் குண்டர்களை ஏவி தேர்தலை தடுத்து நிறுத்த சதி செய்யும் திமுக செந்தில் பாலாஜி.! தாக்குதல் வீடியோ

தோல்வி பயத்தில் திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி அராஜகத்தை கட்டவிழ்த்துவிடுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

minister mr vijayabaskar alleged dmk senthil balaji provoking gundas against admk in karur
Author
Karur, First Published Mar 21, 2021, 9:21 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. ஆளும் அதிமுக மற்றும் ஆட்சிக்கு வர துடிக்கும் திமுக ஆகிய கட்சிகள் வெற்றி பெற கடுமையாக உழைத்துவருகின்றன.

இந்நிலையில், கரூரில் அதிமுகவினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதல் மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. கரூர் நகர 25வது வார்டு மாவடியான் கோவில் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் முடிந்து திரும்பும்போது, அமைச்சரின் காரை திமுகவினர் வழிமறித்தனர்.

minister mr vijayabaskar alleged dmk senthil balaji provoking gundas against admk in karur

இதையடுத்து திமுக மற்றும் அதிமுகவினரிடையே மோதல் மூண்டது. திமுகவினர் கல், கட்டை ஆகியவற்றால் அதிமுக நிர்வாகிகள், ஐடி டீம் உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோரை தாக்கியதில் அதிமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கடும் காயமடைந்தனர்.

திமுகவினரின் அராஜக தாக்குதலையடுத்து, காயமடைந்த அதிமுகவினர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

"

அப்போது, தோல்வி பயத்தில் திமுக குண்டர்கள், ரவுடிகளை ஏவி அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த சில நாட்களாகவே திமுகவினர் கரூரில் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு, தேர்தலை நிறுத்த சதி செய்துவருகின்றனர். அதிமுகவினர் மீதான தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையரும் காவல்துறையினரும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின்போதே அராஜகத்தை செந்தில் பாலாஜி கட்டவிழ்த்துவிடுவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணற்கொள்ளை குறித்தும் அதிகாரிகளை செந்தில் பாலாஜி ஒருமையில் பேசுவதையும் சுட்டிக்காட்டி, திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios