Asianet News TamilAsianet News Tamil

இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்... பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை...!

இடைத்தரகர்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

minister moorthi says tn people aware of mediators
Author
Chennai, First Published Jul 7, 2021, 6:46 PM IST

பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்கள் இடைத்தரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். 

போலி பத்திரங்கள் மற்றும் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திர பதிவுகள் மீது பதிவுத்துறை உயர் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா வரும் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

minister moorthi says tn people aware of mediators

கொரோனா கால கட்டமான 2021 ஏப்ரல் மாதம் மட்டும் 2,30,792 பத்திரப்பதிவு நடைப்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் மிகவும் அதிகளவில் இந்த ஆண்டு பத்திரப்பதிவு நடைப்பெற்றுள்ளது. பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். இடைத்தரகர்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

minister moorthi says tn people aware of mediators

ஆன்லைனில் பத்திரபதிவு மேற்கொள்ள வழிவகை செய்யும் ஸ்டார் 2.0 திட்டம் ஏற்கனவே அனைத்து பதிவாளர் அலுவலங்களிலும் நடைமுறையில் உள்ள நிலையில், பணிகள் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் நிறைவு பெறும் என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios