Asianet News TamilAsianet News Tamil

இந்த அமைச்சரை நீக்குங்கள்! இல்லன்னா எதையாவது சொல்லி உங்கள் ஆட்சிக்கே பங்கம் விளைவிப்பார் முதல்வரே! பாஜக.!

தமிழக அரசு செயல்படுத்தும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், சுகாதார காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களில் முறைகேடுகள், ஊழல், தவறுகள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

Minister Mano Thangaraj will give bad name to your government.. narayanan thirupathy tvk
Author
First Published Dec 1, 2023, 6:36 AM IST

இப்படியொரு பொறுப்பில்லாத, முதிர்ச்சியில்லாத வாட்ஸ் அப் செய்திகளை வைத்து அறிக்கை விடும் அமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது தமிழர்களின் துரதிர்ஷ்டம் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- சிஏஜி அறிக்கையில் மத்திய அரசின் சில திட்டங்களில் ஊழல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது உண்மை தான். ஆனால் அந்த ஊழலை செய்துள்ளது அந்த திட்டங்களை செயல்படுத்தும் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க;- ஒரு நாள் மழையில் திக்கு முக்காடி திணறிக்கொண்டிருக்கும் சென்னை! வயிறெரிந்து சாபம் விடும் மக்கள்! பாஜக விளாசல்!

Minister Mano Thangaraj will give bad name to your government.. narayanan thirupathy tvk

தமிழக அரசு செயல்படுத்தும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், சுகாதார காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களில் முறைகேடுகள், ஊழல், தவறுகள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை மத்திய அரசு மாநில அரசிடம் கேட்டுள்ளது என்பது கூட இந்த அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு தெரியவில்லையே.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Minister Mano Thangaraj will give bad name to your government.. narayanan thirupathy tvk

இது கூட தெரியாமல் 'வாய் புளித்ததோ, மாங்காய்' புளித்ததோ என்று பேசும் இந்த அமைச்சரை என்னவென்று சொல்வது? இப்படியொரு பொறுப்பில்லாத, முதிர்ச்சியில்லாத, வாட்ஸ் அப் செய்திகளை வைத்து அறிக்கை விடும் அமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது தமிழர்களின் துரதிர்ஷ்டம். இந்த அமைச்சரை உடனடியாக நீக்குங்கள் முதல்வர் அவர்களே, இல்லையெனில் எதையாவது சொல்லி உங்கள் ஆட்சிக்கே பங்கம் விளைவிப்பார் போலிருக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios