Asianet News TamilAsianet News Tamil

உரிமம் ரத்து செய்யப்படும்... தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

 கொரோனா நோயாளிகள் இறக்கும்போது மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

Minister Ma. Subramanian warns private hospitals
Author
Chennai, First Published Jun 8, 2021, 10:57 AM IST

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கொரோனா நோயாளிகள் இறக்கும்போது மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

Minister Ma. Subramanian warns private hospitals

காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை அளிக்காமல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மேலும், மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்வதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதிக கட்டணம் வசூலித்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Minister Ma. Subramanian warns private hospitals

கொரோனா தடுப்பூசி வந்தவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து தரப்படும். கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் விலையிலிருந்து 150 ரூபாய் கூடுதல் விலைக்கு தனியார் மருத்துவமனைகளில் விற்கலாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios