கலெக்டர் முன்னாடியே அமைச்சர் இப்படி செய்யலாமா? திமுக கவுன்சிலரை ஓங்கி தலையில் அடித்த KN.நேரு.. வைரல் வீடியோ.!

திமுக அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் உள்ளிட்டோர் சர்ச்சையான வகையில் பேசியது வைரலாகி பெரும் விவாத பொருளாக மாறியது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், காலையில் நான் கண்விழித்து பார்க்கும்போது, ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் எழுந்து பார்ப்பதாக கூறியிருந்தார். 

Minister KN Nehru beat DMK councillor,,, Video Viral

திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் உள்ளிட்டோர் சர்ச்சையான வகையில் பேசியது வைரலாகி பெரும் விவாத பொருளாக மாறியது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், காலையில் நான் கண்விழித்து பார்க்கும்போது, ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் எழுந்து பார்ப்பதாக கூறியிருந்தார். அவரது கட்சிக்காரர்களைப் பார்த்து பயப்படும் நிலைக்கு முதல்வர் சென்றுவிட்டார் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு செய்த செயல் வைரலாகி கண்டங்களும் எழுந்து வருகின்றன. 

இதையும் படிங்க;- உதயநிதி மட்டுமல்ல.. அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம்.. இபிஎஸ் கோட்டையில் கர்ஜித்த கே.என்.நேரு..!

Minister KN Nehru beat DMK councillor,,, Video Viral

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகுப்பாறைப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஜனவரி 6-ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க;-  நான் அப்பவே சொன்னேன்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி.. எச்.ராஜா..!

இந்தத் தண்ணீர்த் தொட்டி திறப்பு விழாவையொட்டி, அந்தப் பகுதி பெண்கள் சிலருக்கு சில்வர் குடங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. புதிதாகத் திறக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியிலிருந்து அந்த சில்வர் குடங்களில் 54-வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜ் தண்ணீரை பிடித்து கொடுக்க அதை அமைச்சர் கே.என்.நேரு பெண்களுக்கு வழங்கினார். அப்போது, குடம் முழுவதும் ததண்ணீரை நிரப்பிக் கொடுக்க சொல்லி அமைச்சர் திமுக கவுன்சிலரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். கவுன்சிலர் புஷ்பராஜை அமைச்சர் கே.என்.நேரு அடிப்பது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios