தளபதி பெயர் வைத்துக் கொண்டு ஸ்டாலின் செய்யும் அக்கப்போரு தாங்க முடியல... அமைச்சர் காமராஜ் காட்டம்..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தோ தெரியாமலோ தளபதி என்று பெயர் சூட்டி விட்டார்கள் எனவும் அவர் முன்னெடுக்கும் போராட்டங்கள் ஒரு மாதம் கூட நீடிப்பதில்லை என்றும் அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தோ தெரியாமலோ தளபதி என்று பெயர் சூட்டி விட்டார்கள் எனவும் அவர் முன்னெடுக்கும் போராட்டங்கள் ஒரு மாதம் கூட நீடிப்பதில்லை என்றும் அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
திருவாரூரில் தொடக்க கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அறிவித்துள்ள போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தோ, தெரியாமலோ தளபதி என்று பெயர் வைத்து விட்டார்கள். தளபதி என்றால் அடிக்கடி போர் புரியவேண்டுமல்லவா. அதனால்தான் அவர் தினசரி ஏதாவது ஒரு போரை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். அவை அனைத்தும் பிசுபிசுத்து விடுகின்றன என விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த காலங்களில் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருந்ததால் தான் மாணவர்களின் கல்வி வளர்ச்சியடைந்ததாகத் தெரிவித்த அமைச்சர் காமராஜ், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் நிலையாக உள்ளதாகக் கூறினார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் சிபாரிசு செய்யப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.