விஜயின் அரசியல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘நடிகர் விஜயை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என்று என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டியது இல்லை. திரைப்பட நடிகராக தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக சில பரபரப்பாக பேசுகிறார்கள். நடிகரும் விஜய்யும் யாருடைய பேச்சை கேட்டு சொன்னார் என்று தெரியவில்லை. அவருடைய படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அவருடைய மனசாட்சிக்கு தெரியும்.

போன தீபவாளிக்கு நடிகர் விஜயை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது. பரபரப்புக்காக படத்தினை ஓட்ட வேண்டும் என்பதற்காக தன்னையும் அறியமால் அந்த கருத்தினை சொல்லி இருப்பார்.

நடிகர் விஜய் போன்றவர்களை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியது இல்லை. மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக தான் வைத்துள்ளர்கள். 2016 தேர்தல் மட்டுமல்ல, 2019ல் நடைபெற்ற தேர்தலிலும் இந்த ஆட்சி தொடருமா ? என்ற கேள்வி இருந்த நிலையில் 9 இடங்களில் வெற்றியைக் கொடுத்து, இந்த ஆட்சியை தக்க வைத்து மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள். நடிகர் விஜய் அந்தளவுக்கு தன்னை தானே நினைத்து கொண்டால் அது அவரது அறியமை தான்.

தான் அரைவேக்காடு என்பதனை நடிகர் கமல்ஹாசனே ஒத்துக் கொண்டுள்ளார். அரசு அலட்சியத்தினால் கொலை எப்படி நடக்கும், நடிகர் கமல் அரசியல் வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிறயவற்றை குறைசொல்கிறார் என்று தான் அர்த்தம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.