டி.டி.வி.தினகரன் நிதானம் இழந்து பேசக்கூடாது… அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை…

தினகரன் நிதானம் இல்லாமல் பேசுகிறார். ஆட்சியில் பலனை அனுபவித்தவர்கள் இதுபோல் பேச கூடாது  என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

.சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் , அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றும்  ஜெயலலிதாவிற்கு பிறகும் 100 ஆண்டு காலம்  கழகம் வாழ வேண்டும் என்ற கருத்தை முதன்மையாக கருத்தாக எண்ணி, எங்கள் படிகள் அளக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் அணியினருடன் இணைப்பு செயல் வடிவம் பெற்றுள்ளது என்றும் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றும் தெரிவித்த ஜெயகுமார். டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு ஓபிஎஸ் சாதகமான தகவலை தந்துள்ளார் என குறிப்பிட்டார் 
 

அதிமுக ஒன்றுபடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ஓபிஎஸ் பேட்டியை உற்று நோக்கினால், பிரதமருடன் அணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டு இருக்கும் என்பது தெரியும் எக ஜெயகுமார் கூறினார்.

டி.டி.வி.தினகரனின் பேச்சு சரியில்லை. எந்த சூழ்நிலையிலும் யாரும் நிதானத்தை இழந்து விட கூடாது. ஆனால், இங்கிருந்து ஆட்சியின் எல்லா நலன்களையும் அனுபவித்து சென்றவர்கள் சேற்றை வாரி இறைப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.