டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கண்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செல்கிறார்,  முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்: வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார் என்றும், அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்ட நிலையில் ஸ்டாலினுக்கு மட்டும் வயிற்றில் புளி கரைகிறது என்றார்.

 

கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதை அரசு அனுமதிக்க கூடாது என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்த கேள்விக்கு   பதிலளித்த அவர் தொழிற்சாலை அமைப்பதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள கோரிக்கையை ஆராய்ந்தறிந்து மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளிலும் முறைகேடு நடந்து இருக்கலாம் என சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் 
ஐயப்பன் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர், இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுக விற்கு சென்று பிரச்சார பீரங்கியாக விளங்கியவர் இவர் சமீபகாலமாக எந்த விதமான விவாதத்திலும்  பங்கேற்காமல் தலைமறைவாக இருக்கிறார் இதற்கு அப்பாவு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார். 

இவை அனைத்தும் திமுக காலத்தில்  விதைக்கப்பட்ட  பார்த்தினி செடிகள் அவை தற்போது களை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் இதுவரை 35 க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறமால் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்  எதையும் ஆராய்ந்து அறியாமல் முந்திரிக்கொட்டை போல் அறிக்கை வழங்குவதாக கூறியுள்ள முந்திரிக்கொட்டை ஸ்டாலினும், எல் போர்ட் உதயநிதி ஸ்டாலினும், தயாநிதி மாறனும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.