ஓமக்குச்சி நரசிம்மன் போல் ஸ்டாலின் உள்ளதாகவும், என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மொகரம் திருநாளை முன்னிட்டு சென்னை ராயப்புரம் பகுதியில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். இஸ்லாமிய சமூதாயத்தின் சார்பாக மசூதியில் மொகரம் முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். மேலும் நிலவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இந்தியர்கள் எடுத்த முயற்சி,  2.1 கிலோ மீட்டர் தொலைவில் சிக்கனல் துண்டிக்கப்பட்டது  வருத்தப்பட வேண்டிய ஒன்று தான், ஆனால் இது ஒரு தொடக்கம் தான் , அடுத்த முயற்சியில் மிகப்பெரிய வெற்றி அடைவோம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர். ரயில்வே தேர்வு என்பது துறை சார்ந்த தேர்வு தான் என்று கூறிய அவர் , இந்த தேர்வு திமுக ஆட்சி காலத்திலும் நடத்தப்பட்டதாகவும்,  அப்போது அவர்கள் தமிழிற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் என்று குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சி காலத்தில் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை என்றார்.  செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு  அதனால் தமிழகத்திற்கு  எந்த பயனும் ஏற்படவில்லை எனவும் தமிழுக்கு துரோகம் செய்தவர்கள் தான் திமுக என்றும் திட்டவட்டமாக கூறினார். 

ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு..ஸ்டாலின் மேல் உள்ள பல்வேறு வழக்குகள் தோண்டப்படாமல் இருக்கிறது அது ஸ்டாலினுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது என்றார். முரசொலியில் என்னைப்பற்றி கட்டுரை எழுதியதற்கு வாழ்த்துக்கள். இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொற்றிகிறே என்ற அமைச்சர் ஜெயக்குமார். ஓமக்குச்சி நரசிம்மன் போல் தான் ஸ்டாலின் உள்ளார் அவரையும் என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்தார்.  

நாங்குநேரி தேர்தலில் திமுக, காங்கிரஸ் போட்டியிட விருப்பம் குறித்த கேள்விக்கு..Gentle man agreement யை முறையாக கடைப்பிடிப்பது அதிமுக தான்..ஒப்பந்தத்தை ஒருப்போதும் மீற மாட்டோம் என்றும் , ஆனால் திமுக ஜெண்டில்மேனாக இருப்பார்களா என்று கூற முடியாது, மீண்டும் காங்கிரஸ் போட்டியிட்டால் அவர்கள் தன்மானம் உள்ளவர்கள் இல்லையேல் தன்மானம் இல்லாதவர்கள் என்றும் அப்போது அவர் விமர்சித்தார்.