இதுவே திமுக உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால்.... அமைச்சர் ஜெயக்குமார் பகீர்..! 

சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை சார்பில்நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்து  உள்ளார் 

சென்னை விருகம்பாக்கம் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை வழங்கும் நிகழ்ச்சியில் 184 ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை வழங்கினார்

அதன் பின்னர் செய்தியாளர் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி ஜனநாயத்தை மதித்து நடக்கும் ஆட்சி. மக்களுக்காகவே உள்ள கட்சி. அதிமுக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக  நடத்துகிறது என்றும் தெரிவித்து உள்ளார். இதுவே திமுக உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் பெரும் பிரச்சனைகளும் அராஜகங்களும் அரங்கேறி இருக்கும் என  குறிப்பிட்டு பேசினார்.

அப்போது பாஜக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது, அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்து உள்ளார்.