முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையில் நடிகர் கமல்ஹாசனும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்றும் காவிரி விரச்சனை பத்தி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் ளேக்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், கமல்ஹாசனை  அரசியல்வாதி என்று யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்தார்..

காவிரி பிரச்சினையை பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? 1974 ஒப்பந்தம் தெரியுமா? அந்த ஒப்பந்தம் காலாவதியானது தெரியுமா? அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு இருந்தால் இந்த பிரச்சினை இப்போது வந்திருக்காது. புதுப்பிக்காமல் இருந்ததற்கு யார் காரணம்? அந்த காரணத்தை எல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார் என அமைச்சர் குற்றம்சாட்டினார்..

ஜெயலலிதா அரசு சட்டப்போராட்டம் நடத்தியதின் விளைவாக, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவை தமிழ்நாடு பெற்றது. இது பெரிய வரலாறு. இது நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியவாய்ப்பில்லை.

நம்முடைய உரிமையை பெற தமிழகமே கொந்தளிக்கின்ற நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க. ஜனநாயக வழியிலே உண்ணாவிரதம் இருந்தது. ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்வதற்கு துப்பில்லாமல் டுவிட்டரிலும், எழுதி வைத்து படிப்பதிலும் சிறந்த கமல்ஹாசன் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். அவருக்கு அரசியல்வாதிகளுக்கான பண்பு கிடையாது என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்..

‘விஸ்வரூபம்’ படப்பிரச்சினையில் நாட்டை விட்டே சென்றுவிடுவேன் என்று சொன்னவர் இன்று அரசியல் பேசுகிறார். காவிரி வரலாறு தெரியாமல், மக்களுடைய உணர்வு தெரியாமல் பேசுகிறார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்..