தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டியே தவிர கமலஹாசன் எல்லாம் ஒரு ஆளே இல்ல என அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் எந்த அமைச்சர் பேட்டி கொடுக்கிறாரோ இல்லையோ நாள்தோறும் மறக்காமல் செய்தியாளர்களை அமைச்சர்  ஜெயகுமார் சந்தித்து வருகிறார், அவர் கூறும் கருத்துக்கள் சில  சர்ச்சைக்குரியவையாகவும், சில நகைச்சுவையாகவும் இருக்கும்.

அதுவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசனை அவரால் கலாய்க்காமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் கமலஹாசனும், அமைச்சர் ஜெயகுமாருக்கு  அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார்.

இதனிடையே இனி ஜெயகுமாருக்கு பதிலடி கொடுப்பதற்காகவே நடிகை ஸ்ரீபிரியாவை கமலஹாசன் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஜெயகுமார் குறித்து பேட்டி அளித்த  நடிகை ஸ்ரீபிரியா, தமிழகத்தில் நகைச்சுவைக்கென்றே ஒரு துறை உள்ளதாகவும், அதற்கு ஜெயகுமார்தான் அமைச்சர் என்றும் தெரிவித்தார். ஆனால் ஜெயகுமாரின் பேட்டியைக் கேட்டால் சிரிப்பே வராது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  நடிகர் கமல்ஹாசன் நேற்று  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல் வெளியீட்டு விழாவின்போது நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என தெரிவித்தார், அது குறித்து உங்கள் கருத்து என்ன என அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார், நாங்க ரொனால்டோ… திமுக மெஸ்ஸி… எங்க இரண்டு பேருக்கும்தான் போட்டியே  கமலஹாசன் எல்லாம்  ஒரு ஆளே இல்ல என அதிரடியாக கலாய்த்தார்.