வேலூர் மக்களவை தேர்தலில், பாஜகவோடு கூட்டணி தொடரும் எனவும் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

 

சென்னை ராயபுரத்தில், ஸ்ரீ சேனியம்மன் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பதாகவும் கூறினார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து, நாடாளுமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றதாகவும், இனி அதுபோன்ற வெற்றி அக்கட்சிக்கு கிடைக்காது எனவும் ஜெயகுமார் விமர்சித்தார்.

 

வைகோ மீது தான் அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதால் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதாகவும் கூறினார். கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் மேடை பேச்சுக்காக நடிகர் அஜித்குமார் விமர்சனத்துக்கு உள்ளானார் எனவும் தெரிவித்தார்