மு.க.ஸ்டாலினுக்கும், டிடிவி.தினகரனுக்கும் பதவி மேனியா நோய் தாக்கியிருக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார். 

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டுமீல் குப்பம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார் மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையா மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்து கொடுக்கும். இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடைபெறும் விஷயங்களில் அரசியல் கட்சிகள் தலையிட முடியாது. நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது. 

கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை நம்பி இருக்க வேண்டுமே தவிர மதங்களை நம்பி இருக்கக் கூடாது. கமல் வரலாற்றாசிரியராக மாறியிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் ஆகியோருக்கு பதவி மேனியா நோய் தாக்கியுள்ளது. தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவே ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் அரசு இதனை முன்கூட்டியே கணக்கிலிட்டு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.