ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கெத்து...! லிஸ்ட் போட்டு வரிவிலக்கு கேட்டு அசத்தல்..! 

38வது சரக்குகள் மற்றும் சேவை வரி மன்ற கூட்டமானது 18 ஆம் தேதியான இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கலந்துகொண்டு பல  கருத்துக்களை  வலியுறுத்தி உள்ளார்.

வணிக வரித்துறையினர், உயர் அலுவலர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஜிஎஸ்டி அமலாக்கத்துறை பின்பு, இடை மாநில பரிவர்த்தனைகள் மீது தமிழகத்திற்கு 2017 -2018 ஆம் ஆண்டிற்கு வர பெறவேண்டிய ஐ ஜி எஸ் டி தொகை மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விரிவாக ஆலோசனை செய்த பிறகு வீட்டுமனை துறையானது இந்திய பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிப்புடன் வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் உதவிடும் முக்கியமான துறையாக உள்ளது என்பதை குறிப்பிட்டு உள்ளார். 

வீட்டுமனை துறையினை ஊக்குவிப்பதற்கான அமைச்சர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. வியாபாரிகள் மற்றும் தொழில் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து ஜிஎஸ்டி சட்டம் மற்றும் விதிகளில் உள்ள சில பிரச்சினைகள் மற்றும் சிரமங்களை கலைவதற்கான மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சட்ட குழுவானது வியாபாரம் நடத்துவதை வெளிப்படுத்துவதற்கும் கடைபிடிக்க வேண்டிய செயல் முறைகளை மேலும் எளிமையாக்கி சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அன்று கோவாவில் நடைபெற்ற 37வது சரக்குகள் மற்றும் சேவை வரி மன்றக் கூட்டத்தில் வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு முன்வைத்த பல கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் வணிக பிரதிநிதிகள். வணிக சங்கங்கள் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது.

அந்த பவகையில், பிஸ்கட்கள், உரம், நுண்ணூட்டச்சத்து, பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், கற்பூரம், காய்ந்த மிளகாய், வெந்தயம் தனியா மஞ்சள் போன்றவை மற்றும் அதன் பொடிகள், அட்டைகள், டைரிகள் பயிற்சி குறிப்பு மற்றும் கணக்கு புத்தகம் போன்ற காகிதப் பொருட்கள், அரிசி தவிடு மீது வரி விலக்கு, சாதாரண மக்களுக்கான இன்சுரன்ஸ் பிரீமியம் மீது தற்போது விதிக்கப்படும் 18 சதவீத வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.