மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பொது இடத்தில் மாஸ்க் போடாமல் சென்றதற்காக அவர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி புகார் அளித்திருக்கிறார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாஸ்க் அணியாமல் இருந்துள்ளார். இதை தொலைக்காட்சிகளில் பார்த்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பொதுஇடத்தில் மாஸ்க் அணியாமல் இருந்த ஜெயக்குமார் மீது 24 மணி நேரத்தில் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்தபுகாரை கிண்டி காவல் நிலையத்திற்கு உள்ளது காவல்துறை கட்டுப்பாட்டு அறை. மேல் அதிகாரிகள் உத்தரவிட்டால், அமைச்சர் ஜெயக்குமார் மீது ஐபிசி 188, 269 ஆகிய பிரிவுகளில் கிண்டி காவல் ஆய்வாளர் சந்துரு வழக்கு பதிவு செய்ய முடியாமல் தவியாய் தவித்து வருகிறார். வழக்கு போட்டால் ட்ரான்பர் கிடைத்தாலும் பரவாயில்லை.காத்திருப்போர் பட்டியலில் இடம் பிடித்துவிடுவோமோ என்கிற பயம் இன்ஸ்பெக்டரை தொற்றியிருக்கிறது, வழக்கு போடாவிட்டாலும் நீதிமன்றம் கேள்வி கேட்கும் என்ன பதில் சொல்லுவது என்று  தெரியாமல் இருதலைக்கொல்லி தலை பாம்பு போல் இருக்கிறார் இன்ஸ்.