என்னோட மக்கள் தொடர்பு அதிகாரியா சம்பளம் வாங்காமல் பணியுரியும் அமைச்சர் ஜெயகுமார் போல என்னால் கூட நடிக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிண்டல் செய்துள்ளார்

திருச்சியில்  நடிகர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. 

இதில் பேசிய கமல்ஹாசன், மததிய அரசு கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என தெரிவித்தார், காவிரிக்காக தமிழக மக்கள் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினால் இந்த நேடே அதிரும் என்றும் கமல் குறிப்பிட்டார்.

அவரது உரைக்கும் பிறகு கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  சினிமாவில் கமல் வெற்றிகரமானவராக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவரால் அப்படி இருக்க முடியாது’ என அமைச்சர் ஜெயகுமார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், அதிமுகவில் இருந்து என்னிடம் சம்பளம் வாங்காமல் என்னுடைய மக்கள் தொடர்பாளராக அவர் இருந்து வருகிறார் என குறிப்பிட்டார்.

அவர் என்னை எந்த அளவிற்கு விமர்சிக்கிறாரோ அந்த அளவுக்கு மக்கள் என் மீது அன்பு செலுத்துவார்கள். அவரது பணி தொடரட்டும் என்று வாழ்த்திய கமலஹாசன், . அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்று கிண்டல் செய்தார்.

நான் சினிமாவில் அரசியல் செய்ததில்லை. அரசியல் செய்யும் போது கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவரால் இதைச் செய்ய முடியுமா? என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.