ஆஹா....டீ கடையில் அமைச்சர் ஜெயக்குமார் செல்பி....யார் கூட தெரியுமா..?

மீன்வளத்துறை துறை அமைச்சர் ஜெயகுமார் டீ கடையில் இருந்து டீ குடித்தபடியே இளைஞர்களுடன் செல்பி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சென்னை தண்டையார் பேட்டையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த   மீன் வளத்துறை துறை அமைச்சர் ஜெயகுமார் அங்குள்ள டீக்கடையில், டீ குடிக்க சென்றார்.

அப்போது இதனை அறிந்த மக்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர்.பின்னர் ஆர்வமாக மக்கள் அவருடன் பேச தொடங்கியதும்,அவரும் "நானும் ராயபுரம் தான்" என  தெரிவித்து உள்ளார்.

பின்னர் அங்கிருந்து செல்லும் முன், அமைச்சருடன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுக்க தொடங்கினர்.

அதில் இந்த செல்பி தான் வைரலாக பரவி வருகிறது.