பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல என  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .  பாஜக நிர்வாகி கொலைக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்றும்,  இந்துக்காளாலும்  வன்முறைகளில் இறங்கமுடியும் என்றும் பதிலடி கொடுக்க முடியும் என்று அவர் எச்சரித்து பேசி இருந்தது  இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு  கூறியுள்ளார் . 

 

சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஆகியோர் கலந்து கொண்டனர் .  அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார் .  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ,  பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களைப் பற்றி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார் .  அதுமட்டுமல்லாமல் அவர் பேசியது அதிமுகவின் கருத்து கிடையாது ,  அது அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்றார் . 

அவரது கருத்து அது இல்லாதபோது கவர்னரிடம் எப்படி முறையிடலாம் எனவும் கேள்வி எழுப்பினார் .  டிஎன்பிஎஸ்சி தேர்தலில் தவறு செய்தவர்கள் யாரும் அதில் இருந்து  தப்பிக்க முடியாது என்ற கூறிய அமைச்சர் ,  தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,  இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.  இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி திமுக நடத்தும் போராட்டம் உதயநிதி  ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதற்கான ஏற்பாடு எனவும் அப்போது அவர் குற்றஞ்சாட்டினார்.