மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில்  கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர் திருவள்ளுவரை பொறுத்தவரையில் சாதி மதம் இனம் மொழிகளை கடந்து உலகிற்கே பொதுமறை நூலை வகுத்து கொடுத்தவர்,  மனித குலத்திற்கு அப்பாற்பட்ட தெய்வப்புலவர் .  அவரை வைத்து அரசியல் செய்வது மிக மோசமான வேலை என்றார்.  கமலஹாசன் பிறந்தநாளான இன்று திருவள்ளுவருடைய உருவத்தில் கமல்ஹாசனின் முகம் ஒட்டப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.  

இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  திருவள்ளூவர் உடன் கமல்ஹாசனை ஒப்பிடுவது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார், மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆக முடியாது,  அதே போல் திருவள்ளுவரின் புகைப்படத்தில் கமல்ஹாசன் தலையை ஒட்டி வைத்தால் கமல்ஹாசன்  திருவள்ளுவர்  ஆகி விடுவாரா.? என அவர் கேள்வி எழுப்பினார்.  இதுபோன்ற செயல்களை உடனே தடுக்க வேண்டும் என்ற அவர், இதை ஊக்கப்படுத்த கூடாது என்றும்.  திருவள்ளுவர் மீது குறிப்பிட்ட மதத்தையோ சாதியையோ திணிக்கக்கூடாது என்றார்.