minister jayakumar criticize kamals meeting with kumarasami
குமாரசாமிய கட்டிப்பிடிச்சா...காவிரி நீர் வராது...! கமலின் "கட்டிபிடி வைத்தியத்தை" சுட்டிகாட்டிய ஜெயகுமார்...!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எந்த ஒரு கருத்தையும் மிகவும் சுவாரஸ்யமாக சொல்லக் கூடியவர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார்,
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆலையை மூடியதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் நீதிமன்றங்களுக்கு சென்றாலும் இனி, ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் நிறுவ முடியாது என அவர் தெரிவித்து உள்ளார்
மேலும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாற்ற முடியாது என ஸ்டாலினுக்கு தெரிந்தும், வேண்டும் என்றே மக்களை குழப்புகிறார் எனவும் தெரிவித்து இருந்தார்
இதற்கு அடுத்தபடியாக, நேற்று மக்கள் நீதி மய்யம் கமல், கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். இது குறித்து எழுப்பிய கேள்விக்கு...
காவிரி நீர் திறக்க வேண்டுமா வேண்டாமா என்பதை இனி ஆணையம் முடிவு செய்து விடும்....இதை மாநில அரசு மட்டுமே முடிவு செய்து விட முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்
வசூல்ராஜா படத்தில் நடந்துக் கொண்டது போல், நிஜ வாழ்கையில் குமாரசாமியுடன் கட்டி புடி வைத்தியம் செய்தால், காவேரி தண்ணீர் வராது என அவர் தெரிவித்து உள்ளார்.
