தேனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நம் அனைவருக்கும் இந்து என்கிற உணர்வு முதலில் இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது ரவீந்திரநாத் குமாரின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுக ஜாதி, மதம் பார்க்காத கட்சி என்றும் ரவீந்திரநாத் கூறியது அவரது சொந்த கருத்து என்றார்.

மு.க.ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் முதல்வரின் வெளிநாடு பயணத்தை விமர்சிப்பதாக கூறிய அவர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் விழா எடுப்பேன் என்ற ஸ்டாலின் விரைவில் எங்களை அழைத்து விழா எடுப்பார் என்றார்.

மேலும் திமுகவினருக்கு காங்கிரஸ்காரர்களும் திகார் சிறைக்கு சென்று தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாக குறிப்பிட்டார்.