அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததால்தான் நகர்ப்புறத் தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் திமுகவில் அதிமுக சங்கமம் ஆகிவிடும் என்று அவர் கூறிய பதில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததால்தான் நகர்ப்புறத் தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் திமுகவில் அதிமுக சங்கமம் ஆகிவிடும் என்று அவர் கூறிய பதில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற அமைப்புகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளளின் 12,838 பதிவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதனிடையே தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.21 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.பிரதான எதிர்க் கட்சியான அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் திமுக வென்ற எண்ணிக்கையில் பாதிக்கு பாதி இடங்களை கூட அதிமுக பெறவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிகள் ஏதும் இல்லாமல் தனித்து போட்டியிட்டது.அதனால் தற்போது தோல்விக்கு முழுக்க முழுக்க அதிமுகவே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்களின் சொந்த வார்டுகளிலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது.அதாவது சேலம், தேனி,கோவை உள்ளிட்ட அதிமுக ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி என அனைத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

இரட்டை தலைமையால் கட்சியில் ஏற்கெனவே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் பெரும் கலக்கத்தை கட்சியில் ஏற்படுத்தியிருப்பதாகவே சொல்லப்படுகிறது. பணபலத்தால், ஜனநாயகத்தை மீறி திமுக வென்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் திமுகவின் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் வருங்காலத்தில் திமுகவில் அதிமுக சங்கமம் ஆகிவிடும் என்றும் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இல்லாததால்தான் நகர்ப்புறத் தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.